ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் |
ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் நேற்று (அக்-10) வெளியானது. படத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல மொழி திரையுலகை சேர்ந்த கலர்புல்லான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் ராணா நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த படத்தில் என்ட்ரி கொடுத்தாலும் பவர்புல்லான வில்லனாக நடித்திருக்கிறார்.
தெலுங்கில் 'வேட்டகாடு' என்கிற பெயரில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தாலும் கடைசி வரை அந்த டைட்டிலை பெற முடியாததால் வேட்டையன் என்கிற தமிழ் பெயரிலேயே அங்கே படம் வெளியானது. இது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு பேச்சு பரவியது.
இந்த நிலையில் நடிகர் ராணாவும் தெலுங்கில் இந்த படத்தை விநியோகம் செய்திருக்கும் அவரது தந்தை சுரேஷ் பாபுவும் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய ராணா, “சமீபத்தில் வெளியான ஜூனியர் என்டிஆரின் தேவரா திரைப்படம் கூட தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் அதே பெயரில் தான் வெளியானது. இப்போதெல்லாம் ரசிகர்கள் டைட்டிலை விட கதையையும் அதில் யார் நடிக்கிறார்கள் என்பதையும் மட்டுமே பார்க்கிறார்கள். வேட்டையன் படத்திற்கு இங்கே பொருத்தமான டைட்டில் பெற முடியாத சூழலில் தான் அதே பெயரில் வெளியாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதேபோல விநியோகஸ்தர் சுரேஷ்பாபு கூறும்போது, “ஹாலிவுட்டில் வெளியாகும் அவதார், டைட்டானிக் ஆகிய படங்களை அதே டைட்டிலில் இங்கே எல்லோரும் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் இங்கே நம் பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் ஒரு பிரச்னையாக பேசப்படுகிறது” என்று கூறியுள்ளார்.