அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் தங்கலான். ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கும் வந்த இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் வரவேற்பு பெற்றது . இந்த நிலையில் அடுத்தபடியாக தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு படக்குழு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவரை சேர்ந்த பொற்கொடி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில், புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த தங்கலான் படம் ஓடிடியில் வெளியானால் இரண்டு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தங்கலான் ஓடிடியில் வெளியாவது தள்ளிப் போகும் என்று தெரிகிறது.