டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா |
நடிகர் தனுசும், ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். பின்னர் இவர்கள் சட்டபூர்வமான விவாகரத்து கோரி பரஸ்பரம் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இவர்கள் இருவரும் 7ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அப்படி ஆஜராகி விவாகரத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக வாக்குமூலம் அளித்தால் கோர்ட் முறைப்படி விவாகரத்து வழங்கி விடும்.
ஆனால் நேற்று இருவருமே கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும், இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு இருவரும் ஆஜராகவில்லையா என்று தெரியவில்லை. என்றாலும் வருகிற 19ம் தேதி உண்மை நிலவரம் தெரியவரும்.