ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
அந்தக்கால பிரமாண்ட இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் 50வது நினைவு நாள் இன்று. பந்துலு என்றாலே ‛வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன்' போன்ற படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் பி.ஆர்.பந்துலு ஒரு இயக்குனர் மட்டுமல்ல, நல்ல நடிகர். நடிக்க நல்ல வாய்ப்பு கிடைக்காததாலேயே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆனார்.
கர்நாடக மாநிலம், கோலாரில் பிறந்தவர் பந்துலு. பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பதுதான் முழுப்பெயர். அடிப்படையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம். 1937ம் ஆண்டு 'ராஜபக்தி' எனும் கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறிய கேரக்டர்தான் என்றாலும் நிறைய பாராட்டு கிடைத்தது. இதனால் நடிப்பில் கூடுதல் ஆர்வம் ஆனார். ஆனாலும் தொடர்ந்து சிறிய கேரக்டர்கள்தான் கிடைத்தது.
கன்னடத்தில் சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டு தமிழுக்கு வந்தார். 1952ல், கலைவாணரின் 'பணம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அந்த படத்தில் சிவாஜியும் நடித்தார். அதன் பிறகு 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியுடன் மீண்டும் நடித்தார். இந்த கால கட்டத்தில் இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். ஒரு கட்டத்தில் பந்துலு பணக்காரர் என்பதால் சிவாஜியை வைத்து தமிழ் படம் ஒன்றை தயாரித்து, இயக்க விரும்பினார். சிவாஜியும் ஒப்புதல் தரவே 'பத்மினி பிக்சர்ஸ்' என்று நிறுவனத்தை தொடங்கி 'தங்கமலை ரகசியம்' படத்தை இயக்கினார். படம் சூப்பர் ஹிட். அதன்பிறகு நடிப்பை கைவிட்ட பந்துலு தொடர்ந்து பல படங்களை இயக்கினார். சிவாஜியை வைத்து அதிமான படங்களை இயக்கினார். பின்னர் எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை இயக்கினார்.