வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 13ம் தேதி வரை மைசூரு நகரில் நடைபெறுகிறது. அதன் கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 'யுவ தசரா' என்ற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதில் நாளை அக்டோபர் 9ம் தேதி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரியும், அக்டோபர் 10ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளது. உட்டனஹள்ளி ரிங் ரோடில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய இசை நிகழ்ச்சி குறித்து ஏஆர் ரஹ்மான், “அக்டோபர் 9, யுவதசரா 2024 நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மைசூரு தசரா விழாவில் சாமுண்டீஸ்வரி அனுக்கிரகத்தில், முதல் முறையாக நவராத்திரி விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என இளையராஜா கன்னடத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.