மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கும் படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவர்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இதன் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர் பிரபு மற்றும் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இதன் கிளை நிறுவனமாக புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் என்கிற இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி 'மாயா, மாநகரம், மான்ஸ்டர், இறுதிச்சுற்று என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பொடென்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக்' திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசும்போது “இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த 'பிளாக்' படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்” என்று கூறினார்.