வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகை மாளவிகா மோகனன் மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதை காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் ஒரு கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி, உணவு மற்றும் பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் ஒரு நவீன நாடோடிகளை போன்றவர்கள்.
ஒரு நாள் ஐதராபாத் என்றால் அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என பயணிக்க வேண்டியிருக்கும். நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால், நடிகர் தான் அதற்கான காரணம் என்பார்கள். ஒரு வேளை படம் ஓடவில்லை என்றால் நாயகியை குறை சொல்வார்கள். தென்னிந்திய சினிமாவில் இது சாதாரணமானது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.