ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், சில ஹிந்திப் படங்களில் நடித்த பின் 'தேவரா 1' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தமிழில் பேசி அசத்தினார். மும்பையில் வளர்ந்தாலும் ஜான்வி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்போது தெலுங்கில் பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சுந்தரத் தெலுங்கில் பேசி தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த 'தேவரா 1' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி அதிகக் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால், “இந்த வார்த்தைகளை நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன். அதனால், இப்போதைக்கு உங்களுக்காக என்னிடம் இருந்து இந்த குறுஞ்செய்தி,” என வீடியோவைப் பதிவிட்டுப் பேசியுள்ளார்.
அதில், “என்னை 'ஜானு பாப்பா' என்று அன்புடன் அழைக்கும் அனைத்து தெலுங்கு ரசிகர்களுக்கும், குறிப்பாக என்டிஆர் சார் ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் என் மீது அன்பைப் பொழிவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். நீங்கள் அனைவரும் என் அம்மாவிற்கும் எனக்கும் மிகவும் முக்கியமானவர்கள். உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்த நான் மிகவும் கடினமாக உழைப்பேன். 'தேவரா' எனது முதல் படி,” எனப் பேசியுள்ளார்.