Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு

21 செப், 2024 - 02:02 IST
எழுத்தின் அளவு:
A-world-full-of-demons;-You-cant-survive-if-you-are-good---Rajini-speech


ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். அனிருத் இசையமைத்திற்கும் இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அப்போது ரஜினிகாந்த் பேசும்போது, ''ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் படத்திற்காக மீண்டும் இங்கு வந்திருக்கிறேன். ஒரு டைரக்டருக்கு ஒரு படம் தோல்வியானால் அடுத்து ஹிட் படம் கொடுக்கிற வரைக்கும் நிம்மதியே இருக்காது. அதேபோல் ஹிட் படம் கொடுத்த ஒரு இயக்குனருக்கு முந்தைய படத்தை விட சிறப்பாக அடுத்த படத்தை கொடுக்க வேண்டும் என்று நிம்மதி இருக்காது. இன்றைய காலகட்டத்தில் நல்ல இயக்குனர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. முன்பெல்லாம் கதை திரைக்கதை ஒருவருடையதாக இருக்கும். இன்னொருவர் படத்தை இயக்குவார் . ஆனால் இன்றைக்கு எல்லாமே ஒரே ஆள் செய்கிறார். அதோடு ஒரு படம் ஹிட் அடிக்க மாஸ் ஹீரோக்களுக்கு மட்டும் போதாது. நல்ல தயாரிப்பு நிறுவனமும் வேண்டும்.

செட்டாகாது

நான் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எல்லா நல்ல படங்களையும் பாராட்டும் நான் அப்போது ஜெய்பீம் படத்தை பாராட்டவில்லை. இந்த நேரத்தில் தான் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேலிடம் ஒரு நல்ல லைன் இருப்பதாக என்னுடைய மகள் சவுந்தர்யா கூறினார். அதையடுத்து அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் இந்த படத்தில் நீங்கள் மெசேஜ் சொல்வீர்கள் என்றார். அதெல்லாம் எனக்கு செட்டாகாது. மக்கள் கொண்டாடுவது போன்ற கமர்சியல் கதையாக சொல்லுங்கள் என்றேன்.

அதையடுத்து 10 நாட்கள் டைம் கேட்டார். ஆனால் இரண்டே நாளில் கால் பண்ணி கமர்சியலா படம் பண்ண ரெடி. அதேசமயம் லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்று இல்லாமல் வேறு கோணத்தில் உங்களை காட்டுகிறேன் என்று சொன்னார். அதோடு இந்த படத்துக்கு 100 சதவீதம் அனிருத் தான் இசை அமைப்பாளர் என்று கூறினார். அவரிடத்தில் இந்த படத்தில் வில்லன் யார் என்று கேட்டேன். அப்போது ராணா நடிப்பதாக சொன்னார். பஹத் பாஸில் ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரம் என்று கூறினார். ராணாவை வில்லனாக பார்த்தபோது எனக்கே பயம் வந்துவிடும். பஹத் என்னை மாதிரி ஒரு ஆக்டர். எதார்த்தமாக நடித்தார். அதேபோன்று மஞ்சுவாரியர் நடிப்பை அசுரன் படத்தில் பார்த்திருக்கிறேன்.

அமிதாப்பச்சன் பற்றி இன்றைய ரசிகர்களுக்கு தெரியாது. அவரிடத்தில் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். அதோடு முன்னாள் பிரதமர் ராஜிவ்-ம், அமிதாப் பச்சனும் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் நஷ்டம் அடைந்தார். அப்போது மும்பையே அவரைப்பார்த்து சிரித்தது. அதன் பிறகு டிவி நிகழ்ச்சி முதல் பல்பொடி வரை நிறைய விளம்பரங்களில் நடித்தார். கஷ்டமானபோது விற்ற வீடுகளையெல்லாம் மீண்டும் வாங்கினார்.

வாழ்க்கை

வாழ்க்கை இப்படித்தான், மேலே கீழே என நகர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனாக இருந்தால் பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும் சாமர்த்தியமும் இருக்கணும். இந்த படம் ஞானவேலுக்கு சூப்பர் ஹிட் ஆக அமைய வேண்டும்'' என்று பேசி முடித்தார் ரஜினிகாந்த்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு...  கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம்பிளாஷ்பேக் : ராஜா என்னை ... ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)