தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் 'சிக்கிட்டு, மோனிகா, பவர் ஹவுஸ்' என்ற மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் கூலி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தற்போது கூலி படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கி இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெஸ்ட் பிளானோ சினிமா மார்க் என்ற தியேட்டரில் கூலி படத்தின் பிரிமியர் காட்சிக்கான மூன்று தியேட்டர்களின் மொத்த டிக்கெட்டுகளையும் அங்குள்ள டலாஸ் பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் வாங்கியுள்ளார்கள். இதனால் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.