படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணனான சத்ய நாராயணா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் சுப்பிரமணிசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவின் அண்ணாமலை ஒரு புத்திசாலி. அவர் அரசியலில் நன்றாக வருவார். தமிழக அரசியலில் மிகப்பெரிய இலக்கை அடைவார் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, கமல்ஹாசன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரஜினி எம்.பி ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ரஜினிக்கு அதெல்லாம் தேவையில்லை. அவருக்கு கவர்னர் பொறுப்பே வந்தது. அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் அரசியலில் பதவி வகிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சத்ய நாராயணா.
நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கடினம். ஆனால் பாஜகவின் அண்ணாமலை புத்திசாலி. அரசியலில் பெரிய இலக்கை அடைவார் என்று அவர் சொன்ன பதில் சோசியல் மீடியாவில் கடுமையாக விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.