சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்தனர். அந்தபடம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இப்போது வரைக்கும் அந்த படம் டாப் டென் தமிழ் சினிமா பட்டியலில் இருக்கிறது. திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ருத்ரைய்யா ஆரம்பித்த படம் தான் 'ராஜா என்னை மன்னித்துவிடு'. இதனை தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இயக்க திட்டமிட்டார்.
அண்ணன் ஒரு அகிம்சைவாதி, தம்பி ஒரு நக்சல்வாதி இரண்டு பேருக்கும் இடையிலான விவாதம்தான் படம். இதில் அண்ணனாக சந்திரஹாசனும், தம்பியாக கமல்ஹாசனும் நடிக்க, சுஜாதா கமலின் மனைவியாகவும், சுமலதா காதலியாகவும் நடிக்க தேர்வாகினார்கள். 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்கள் பின்னாளில் வேறு படங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த திரைக்கதையின் பாதிப்பில் தான் பின்னாளில் கமல்ஹாசன் இரண்டு வேறுபட்ட கைதிகளின் உரையாடலாக 'விருமாண்டி' படத்தை எடுத்தார்.




