பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஓராண்டில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி படங்கள் வெளியாகின. மோகன்லாலை வைத்து லூசிபர் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் அவர் நடித்துள்ள சர்ஷமீன் என்கிற படம் திரையரங்குகளுக்கு வராமல் ஜூலை 25ஆம் தேதி நேரடியாக ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக கஜோல் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிகை கஜோலுடன் நடித்த அனுபவம் குறித்து பிரித்விராஜ் கூறும்போது, “கஜோல் ஒரு அற்புதமான நடிகை. அவரைப் போன்றவர்களுடன் நடிக்கும் போது உங்களுக்கான ஆட்டத்திற்காக ஒரு களத்தை தயார் செய்து விட்டு எதிரே நிற்பார்கள். சில நடிகர்களுடன் காட்சிகளை படமாக்கும் முன் ரிகர்சல் பார்த்தாலும் சரி, இல்லை ஒன்றுக்கு ஐந்து முறை ரீடேக் எடுத்தாலும் சரி ஒவ்வொரு முறையும் நடிப்பில் வெவ்வேறு விதமாக வித்தியாசம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். நடிகை கஜோலும் அப்படிப்பட்டவர் தான். இதற்கு முன்னதாக நடிகர் மோகன்லாலிடம் தான் இப்படி ஒரு சிறப்பம்சத்தை பார்த்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.