Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு

21 செப், 2024 - 03:15 IST
எழுத்தின் அளவு:
Can-Tamil-become-Prime-Minister-Be-ready-for-it:-Kamal-Haasan-speech


இந்தியன் - 2 படத்தை அடுத்து தற்போது மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் இன்று அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பொதுக்குழுவில் நீட் தேர்வு ஒழிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பேச்சு ஆபத்தானது என உலகிற்கே தெரியும். ஒரே தேர்தல் நடைபெற்றால் ஒருவருடைய நாமம் மட்டுமே உரைக்கப்படும். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, இனி வருபவர்களுக்கும் எச்சரிக்கை. ஒரே நாடு, ஒரே தேர்தல் செய்து பார்த்த வடுக்கள் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று. இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான். நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அதிக வரி கட்டுகிறோம். இந்த நாட்டை வழி நடத்திக் கொண்டிருப்பது நமது வரி பணம் தான். அதை பகிர்ந்து தர வேண்டும். மாநிலங்களுக்கான நிதி பகிர்வு நியாயமானதாக இருக்க வேண்டும். வீரமும், நேர்மையும் இருக்கிறதா என என்னையே கேட்டுக் கொண்டவன் நான். தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல. அதேபோல், பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல.

நான் நான்கு வயது முதல் மேடையை பார்த்து வருகிறேன். அதனால் அரசியலில் இருக்கிறேன். அன்றாட உடல் நலம் பேணுவது போல ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்த பீடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்க வேண்டும். தோற்ற அரசியல்வாதி நான் தான். தோற்ற அரசியல்வாதியையும் மக்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒரு தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு நாம் தயாராக வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது நமக்கோ, எனக்கோ அல்ல. நாளைக்காக விதை போடுவேன். வேறொருவர் சாப்பிடுவார். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா ... மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)