அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
'மங்காத்தா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன்' என பல படங்களில் நடித்த மகத், தற்போது நாயகனாக நடித்துள்ள படம் 'காதலே காதலே'. பிரேம்நாத் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் மகத்துடன் மீனாட்சி கோவிந்தராஜன், பாரதிராஜா, விடிவி கணேஷ், ஸ்ரீஜா, ரவீனா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஷால் சந்திர சேகர் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மகத் ஒரு பிளேபாய் வேடத்தில் நடித்துள்ளார். ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கிறவர், அடிக்கடி காதலிகளை மாற்றிக் கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் அவருடைய கேரக்டர் பற்றி அவர் காதலிக்கும் பெண்களே, இவன் ஒரு மாசத்துக்கு மேல் ஒரு பெண்ணோடு இருக்க மாட்டான் என்பதை புரிந்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில் விடிவி.கணேஷ், மகத்துக்கு சில அறிவுகளை வழங்குகிறார். அதன் பிறகு ஏற்படும் ட்விஸ்ட்தான் இந்த படத்தின் கதை என்பது இந்த டீசரில் தெரிய வருகிறது. இக்கால இளைஞர்களுக்கு பிடித்தமான ஜாலியான ஒரு காதல் கதையில் இந்த காதலே காதலே படம் உருவாகியுள்ளது.