ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தேசத் தந்தை மகாத்மா காந்தி சினிமா மீது அதிக அக்கறை இல்லாதவர். அவர் சினிமாவும் பார்ப்பதில்லை. அதற்காக அவர் சினிமாவுக்கு எதிரானவரும் அல்ல. சிறு வயதில் 'ராம ராஜ்யம்' என்ற நாடகத்தை பார்த்துதான் தான் திருந்தி வாழ்ந்ததாக அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாகவும் இருந்தது.
அடிக்கடி அவர் ராம ராஜ்யம் குறித்து பேசியும் வந்தார். அப்படியான ஒரு காலகட்டத்தில் உருவான படம்தான் 'ராம ராஜ்யா'. இந்தியில் உருவான இந்த படம் இந்தியா முழுக்க திரையிடப்பட்டது. அந்த வருடத்தில் (1943) அதிக வசூலை கொண்ட படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்த படம் மகாத்மா காந்திக்கு போட்டுக் காட்டப்பட்டது.
விஜய் பட் என்பவர் இயக்கிய இந்த படத்தில் பிரேம் ஆதிப் ராமராகவும், ஷோப்னா சமர்த்த சீதையாகவும் நடித்திருந்தனர். அமெரிக்காவில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகவும் ராம ராஜ்யம் அமைந்தது.




