ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

1977ம் ஆண்டு 'மீனவ நண்பன்' படமாகிக் கொண்டிருந்த நேரம். அப்போது மிகுந்த சிரமத்தில் இருந்த கவிஞர் முத்துலிங்கம் எம்ஜிஆரை சந்தித்து வாய்ப்பு கேட்டார். மீனவ நண்பன் படத்தில் வாய்ப்பு தருவதாக எம்ஜிஆர் வாக்கு கொடுத்தார்.
பிறகு அதனை எம்ஜிஆர் மறந்து விட்டார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருந்த தருவாயில் ஒரு பொது நிகழ்ச்சியில் முத்துலிங்கத்தை பார்த்த எம்ஜிஆர் 'மீனவ நண்பன்' படத்தில் நீங்கள் எழுதிய பாடல் எது? என்று கேட்டார். அதற்கு அவர் அந்த படத்தில் பாடல் எழுத தனக்கு வாய்ப்பு வரவில்லை என்று கூறினார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அதிர்ச்சி அடைந்தார். நான் உங்களுக்கு வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்திருந்தேனே என்று கூறியவர்.
வீட்டுக்கு சென்றதும், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை தொடர்பு கொண்டு 'நீங்கள் ஏன் முத்துலிங்கத்திற்கு வாய்ப்பு தரவில்லை' என்று கோபமாக கேட்டார். 'நீங்கள் எதுவும் சொல்லவில்லையே' என்று கூறியிருக்கிறார். உடனே இயக்குனருக்கு போன் செய்து 'படத்தில் இன்னொரு பாடலை சேர்க்க வாய்ப்பிருக்கிறதா?' என்றார். 'படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இன்னொரு பாடலுக்கு கதையில் வாய்ப்பும் இல்லை' என்றார்.
பரவாயில்லை ஒரு கனவு பாடல் ஒன்றை சேருங்கள். எந்த லாஜிக்கும் மீறாது என்றார். அதன்பிறகு முத்துலிங்கத்தை அழைத்து காதலன், காதலி பாடும் ஒரு கனவு பாடலை எழுதுங்கள் என்றார். மறுநாளே எழுதி கொண்டு போய் கொடுத்தார். அதன்பிறகு பிரமாண்ட அரங்கம் அமைத்து அந்த பாடல் படமாக்கப்பட்டது. இந்த பாடல்தான் படத்தின் ஹெலைட்டாகவும் அமைந்தது.
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடல்எடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ,
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ...
- என்ற பாடல்தான் அது. கவிஞர் முத்துலிங்கத்திற்கு இன்று 82வது பிறந்த நாள்.