வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அக்., 10ம் தேதி வெளியாக உள்ள படம் ‛வேட்டையன்'. அமிதாப் பச்சன், பஹத் பாசில் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, கிஷோர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் பாடல்கள், டீசர் வெளியாகி உள்ளது. ரஜினி போலீஸ் எஸ்பியாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார்.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாய் நடந்தது. சமீபகாலமாக தனது பட இசை வெளியீட்டு விழாவில் கதை சொல்லி வருகிறார் ரஜினி. ஜெயிலர் பட விழாவில் அவர் சொன்ன காக்கா - கழுகு கதை வைரலாகி ரஜினி - விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்றைய பட விழாவில் கழுதை கதை ஒன்றை கூறினார் ரஜினி. அவர் பேசியதாவது : ‛‛இயக்குனர் ஞானவேல் என்னிடம் வந்து பேசும்போது ‛புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும்' மாதிரி நீங்க நடிக்கனும் என ரசிகர்கள் எதிர்பாக்குறாங்க என சொன்னார். அப்போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வந்தது. பெரிய பள்ளத்தாக்கில் இறங்கி துணி துவைக்கும் டோபி ஒருவர், துணி பொதியை சுமக்க கழுதை ஒன்றை வைத்து இருந்தார். ஒருநாள் அந்த கழுதை திடீரென காணாமல் போய்விடுகிறது. பல இடங்களில் தேடுகிறார் கிடைக்கவில்லை. அந்த சோகத்தில் ஒரு மரத்தடியில் போய் எதுவும் பேசாமல் அமர்கிறார். அங்கு ஞானி வந்துவிட்டதாக அங்குள்ள மக்கள் அவரை நினைக்கிறாங்க. சிலர் அவரின் சீடர்களாகவும் மாறுகிறார்கள். அவர் பேசவில்லை என்றாலும் அவர் சிக்னல் காட்டினால் நல்லது நடக்கிறது என மக்கள் நம்புறாங்க.
இந்தச்சூழலில் அங்கு ஒரு கழுதை வருகிறது. அதைபார்த்துவிட்டு என் கழுதை வந்துருச்சு என சத்தமாக கத்துகிறார் அந்த டோபி. அப்போது தான் அங்கிருந்த சிஷ்யர்கள் உட்பட அனைவருக்கும் அவர் கழுதையை தொலைத்த டோபி என தெரிய வருகிறது. உடனே அவரின் சீடர்கள் சிலர் எதுவும் பேசாதீங்க, இப்போது நீங்க பெரிய ஞானி என சொல்லி அமைதியாக உட்கார வைத்துவிடுகிறார்கள்.
அந்த டோபி போலத்தான் நானும்... முள்ளும் மலரும் படத்தில் நான் பேசி நடித்தது எல்லாம் இயக்குனர் மகேந்திரன் சொல்லி தந்து பேசிய வசனங்கள். நான் நடிச்சு அந்த காட்சிகள் வந்தன. அதற்கு பின்னால் ஒரு சீனுக்கு 15 டேக் எல்லாம் வாங்கினேன். டோபி மாதிரி அப்படி நடந்துவிட்டது, என்னை நல்ல நடிகர்னு சொன்னாங்க. தளபதி மாதிரி நடி என்று சொன்னால் என்னால் எப்படி முடியும். அதனால் தான் பைரவி, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை மாதிரியான படங்கள் பண்ணி என் டிராக்கை மாற்றிக் கொண்டேன்'' என்றார்.