ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

சமூக சேவகி சிந்துதாய் சப்கல், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ரக்மாபாய், சுதந்திரப்போராட்ட வீரர் கவுர் ஹரி தாஸ்தான் என மூன்று பயோபிக் படங்களை இயக்கியவர் ஆனந்த் மகாதேவன். இதில், 'சிந்துதாய் சப்கல்' படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது.
பாலிவுட் குணசித்ர நடிகரான இவர் தமிழில் ரிதம், 2.ஓ, கேம் சேன்ஞ்ர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்கி உள்ள படம் 'புலே'. இந்த படம் இந்தியாவின் முதல் 'மகாத்மா' என்று அழைக்கப்படும் ஜோதிராவ் புலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் புலே தம்பதிகளின் வாழ்க்கை படமாகும். மகாத்மா காந்திக்கு முன்பே ஆங்கிலேயர்களுக்கு எதிரான அகிம்சை போராட்டத்தை முன்னெடுத்தவர், பெண் விடுதலை குறித்து பேசியவர், இந்திய அரசியல் சுதந்திரத்தைவிட சமூக சுதந்திரமே பெரியது என்று முழங்கியவர்.
படம் வருகிற ஏப்ரல் 11ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து ஆனந்த் மகாதேவன் கூறும்போது "புலே தம்பதி பற்றி பாலிவுட்டில் படம் வந்ததில்லை. 'காந்தி' படம் போல் காட்டவேண்டும் என இருவரின் சிறுவயது முதல் இறுதிக்காலம் வரை எடுத்துள்ளோம். செட் எதுவுமே போடாமல் அவர்கள் வாழ்ந்த புனே, கோலாப்பூர் என மகாராஷ்டிர சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கே படப்பிடிப்பு நடத்தினோம்.
புலே தம்பதியரின் புகைப்படங்கள் கிடைக்கவில்லை. ஓவியங்கள்தான் கிடைத்தது. அந்த ஓவியத்தைப் பார்த்ததும் பிரதிக் காந்தியும் பத்ரலேகாவும்தான் நினைவுக்கு வந்தார்கள். 'ஸ்கேம் 1992' சீரிஸில் ஹர்ஷத் மேத்தாவாகக் கலக்கியவர் பிரதிக் காந்தி. இந்தியா முழுக்க அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். 'இந்தப் படைப்பில் நீங்கதான் நடிக்கணும்'னு சொன்னதுமே அவருக்கு ரொம்ப சந்தோஷம். பிரதிக்கும் பத்ரலேகாவும் புலே தம்பதியருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்" என்றார்.