இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
இந்தியாவின் 'முதல் மகாத்மா' என்று அழைக்கப்படும், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாறு 'பூலே' என்ற திரைப்படமாக தயாராகி உள்ளது. இந்த படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியிருந்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினர் இத்திரைப்படத்தில் அவர்களை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ‛யூ' சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு, படக்குழுவினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதோடு சாதி குறித்தான உரையாடலைக் கொண்ட வாய்ஸ் ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. படத்தில் சில வசனங்களையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இது குறித்து படத்தில் இயக்குனர் ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ''படத்தின் டிரைலர் பற்றி சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தைப் பார்ப்பதில் எந்த தொந்தரவும் இருக்காது, என்றாலும் சில சந்தேகங்களை அகற்ற வேண்டியது இருக்கிறது." என்கிறார்.