ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
'தி கோட்' படம் வெளியானதன் பின் இந்த வாரத்தில் சுமார் 8 படங்கள் வரை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தோனிமா, கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், சட்டம் என் கையில், கோழிப்பண்ணை செல்லதுரை, தோழர் சேகுவேரா, தி கன்பெஷன்” ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் சில படங்களுக்கு மட்டுமே வெளியீட்டிற்கு முன்பான சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
யு டியூப் பக்கம் போனால் 'நந்தன்' படத்தின் நாயகன் சசிகுமார் பேட்டிகள் மட்டுமே அதிக அளவில் தென்படுகிறது. மற்ற படங்களுக்கான பேட்டிகளும், புரமோஷன்களும் மிகவும் குறைவாகவே உள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் படம் 'கடைசி உலகப் போர்', ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் படம் 'லப்பர் பந்து', சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன் நாயகனாக நடிக்கும் படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை', சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'சட்டம் என் கையில்', சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 'தோழர் சேகுவேரா' ஆகிய ஆறு படங்களுக்கு இடையில்தான் போட்டி.
கடந்த வாரத்தில்தான் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து 'தி கோட்' படத்தைப் பார்த்து அதை தமிழகத்தில் 200 கோடி வசூலுக்குக் கொண்டு வந்தனர். மீண்டும் அவர்கள் குடும்பத்துடன் வந்து இந்த வாரம் வெளியாக உள்ள சிறிய படங்களைப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். படம் வெளியான பின் எந்தப் படத்திற்கு நல்ல விமர்சனமும், கமெண்ட்டுகளும் வருகிறதோ அதற்கு மட்டுமே செல்வார்கள் என்றுதான் எதிர்பார்க்க முடியும்.