போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுவாசிகா. 15 வருடங்களுக்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் மலையாள திரை உலகிற்கு சென்று முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பினார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
அதேசமயம் கடந்த வருடம் ஜனவரி மாதம் தனது காதலரும், சின்னத்திரை நடிகருமான கேரளாவைச் சேர்ந்த பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுவாசிகா. அப்போது அவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவுற்ற நிலையில் நேற்று இந்து தமிழ் முறைப்படி மீண்டும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேசமயம் இது உறவினர்கள், நண்பர்கள் என அழைத்து மிகப்பெரிய அளவில் நடைபெறாமல் இந்து முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்திற்காக, அதை நினைவாக வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷூட்டிங் போல இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். “ஷூட்டிங் என்றாலும் கூட நிஜமாகவே திருமணம் செய்தது போன்ற உணர்வு எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது” என சுவாசிகாவின் கணவர் பிரேம் ஜேக்கப் கூறியுள்ளார்.