வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. இடையில் ஒரு படத்தை தயாரிக்க போய் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். சில மாதங்களாக இவர் வாடகை தரவில்லை என ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக கஞ்சா கருப்புக்கும், ரமேஷிற்கும் பிரச்னை உருவாகி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டனர்.
ரமேஷ் அளித்துள்ள புகாரில் ‛‛கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். வீட்டை வேறு ஒரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துகிறார். வீட்டை காலி பண்ண சொல்லியும், வாடகை தரச் சொல்லி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க கஞ்சா கருப்பு அளித்துள்ள புகாரில், நான் வீட்டில் இல்லாத சமயத்தில் உரிமையாளர் ரமேஷ் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்துள்ளார். தனது உடைமைகளையும் சேதப்படுத்தி உள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கஞ்சா கருப்பு தான் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு போலீஸ் உடன் சென்று பார்த்துள்ளார். அங்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறி இருக்கும் அவர், தனது கலைமாமணி பட்டத்தையும் காணவில்லை என்றும், 1.5 லட்சம் ரூபாய் பணம் காணவில்லை என போலீஸில் கதறி உள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.