புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
தடையறத் தாக்க படம் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அதுமட்டுமல்ல அந்த படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்க்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் பிறகு மீகாமன் என்கிற படத்தை இயக்கியவர் மீண்டும் தடம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்திலும் அருண்விஜய் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கியுள்ளார் மகிழ்திருமேனி. வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வரும் மகிழ்திருமேனி தடம் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“தடம் படத்திற்காக ஒரு மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஏனோ மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்று விட்டது. அதை தொடர்ந்து அருண் விஜய் என்னிடம் பேசும்போது அடுத்து உங்களுடன் மீண்டும் ஒரு படம் இணைந்து நடிக்க வேண்டும். அது ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்றார். ஆனால் தடம் படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே இருந்தது. அதன்பிறகு என்னிடம் நேரில் வந்து கதையை கேட்ட அருண் விஜய் கதையின் தன்மையை உணர்ந்து தடம் படத்தில் நடிக்க இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அவரே ஒரு தயாரிப்பாளரையும் எனக்காக ஏற்பாடு செய்து கொடுத்தார்.
திங்கட்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்காக தயாரான சமயத்தில் தான் ஞாயிறு இரவு அந்த மிகப்பெரிய ஹீரோவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. லைக்கா நிறுவனத்திடம் தான் பேசி விட்டதாகவும் அங்கே சென்று கதையை கூறி மேற்கொண்டு விஷயங்களை பார்க்கும்படியும் சொன்னார். ஆனால் நான் அருண் விஜய்க்கு வாக்கு கொடுத்து விட்டதை கூறி அந்த ஹீரோவின் கோரிக்கையை வேறு வழியின்றி ஏற்க முடியாமல் போனது.
என்னைப் பொறுத்தவரை கொடுத்த வாக்கை சரியாக கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல எப்போதுமே நான் நன்கு பிரபலமான நடிகர்களுடன் ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதனால் என்னுடைய அடுத்த படம் ஒரு மிகப்பெரிய ஹீரோவுடன் தான்” என்று கூறியுள்ளார் மகிழ்திருமேனி.
அப்படி தடம் படத்திற்காக இவர் கடைசி நேரத்தில் நிராகரித்த அந்த ஹீரோ யார் என்கிற பெயரையும் சொல்லவில்லை. அடுத்ததாக இவர் யார் படத்தை இயக்கப் போகிறார் என்பதையும் சொல்லாமல் சஸ்பென்சிலேயே வைத்து விட்டார்.