ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது. விஷால், தனுஷ் ஆகியோரை வைத்து புதிதாகப் படங்களைத் தயாரிக்க உள்ளவர்கள் சங்கத்தை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவர்கள் மீதான மறைமுகத் தடை விதிக்கும் ஏற்பாடு என்ற சர்ச்சை எழுந்தது.
இதன்பின் விஷால் தரப்பிலிருந்து பதிலுக்கு அறிவிக்கை ஒன்று வெளியானது. ஆனால், தனுஷ் அமைதி காத்து வந்தார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் நடிக்க ஒரு படம் ஆரம்பமாகி பின் நின்று போனது. அடுத்து செயலாளராக இருக்கும் கதிரேசன் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கி நடித்துக் கொடுக்காமல் இருந்ததால்தான் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவுகளை அடுத்து தனுஷ் விவகாரம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதன் காரணமாக தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. டான் பிக்சர்ஸ் என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.




