மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அக்டோபர் 10-ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. என்றாலும் எந்த தேதியில் வெளியாகிறது என்பதை இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை.
இப்படியான நிலையில், வருகிற தீபாவளி தினத்தில் அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் அமரன் உள்ளிட்ட சில படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டதால் கங்குவா படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடாமல் இருந்தார்கள். ஆனால் தற்போது அஜித்தின் விடாமுயற்சி டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் தீபாவளிக்கு கங்குவா படத்தை வெளியிடுவதற்கு படக்குழு தயாராகி வருகிறது. ஒருவேளை அஜித்தின் விடாமுயற்சி தீபாவளிக்கு வெளியானால், கங்குவா படத்தை நவம்பர் 14ம் தேதி வெளியிடுவதற்கும் ஒரு திட்டம் இருப்பதாக அப்பட வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.