Advertisement

சிறப்புச்செய்திகள்

16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்'

17 செப், 2024 - 03:48 IST
எழுத்தின் அளவு:
The-GOAT-Crosses-400-Crore-Collection


வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாள் வசூலாக 126 கோடியைக் கடந்ததாகவும், நான்கு நாட்களுக்குப் பிறகு 288 கோடியை கடந்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், அதன்பின் கடந்த ஒரு வாரமாக எந்த வசூல் விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் 25 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்தே 25 கோடிதான் வந்திருக்கும் என்கிறார்கள். வட மாநிலங்களில் 25 கோடியும் வெளிநாடுகளில் வசூலான தொகை 150 கோடி என்பதும் தகவல்.

இந்த வாரம் பல புதிய படங்களும், அடுத்த வாரம் சில புதிய படங்களும் வெளியாக இருப்பதால் 'தி கோட்', 500 கோடி வசூலைக் கடப்பது சிரமம் என்பதுதான் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின் தற்போதைய அப்டேட்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு!சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு ... ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Amjath -  ( Posted via: Dinamalar Android App )
17 செப், 2024 - 07:09 Report Abuse
Amjath சும்மா அடிச்சு விடு... தினமலரில் அணிலுக்கு இந்த சப்போர்ட்டா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)