லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சமந்தாவுக்கு 'மயோசிடிஸ்' என்ற சரும நோய் பிரச்னை உள்ளது. அதிகமான வெளிச்சம், வெப்பத்தை எதிர்கொண்டால் தோல் அரிப்பு ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அம்சம். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். குணமாகி திரும்பியதும் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் அந்த பிரச்னை தலைதூக்கி உள்ளது.
இதற்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: நான் நோய்வாய்ப்பட்டு, வலுவான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தபோது, அதனால் முதலில் என் தோல்தான் பாதிக்கப்பட்டது. நிறமி, வறட்சி, வீக்கம் மற்றும் பிற சிக்கல்களால் தோல் பாதிக்கப்பட்டது. இப்போதும் இதனால் அடிக்கடி பாதிக்கப்படுகிறேன்.
இதனால் எனது சருமத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆபத்து இல்லாத வழியை எடுக்க முடிவு செய்துள்ளேன். நான் மிகவும் சரும உணர்வுள்ளவளாக மாறிவிட்டேன், மேலும் என் சருமத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால், சரும ஆரோக்கியம் என்பது அழகு மட்டுமல்ல; இது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும்” என்று எழுதியுள்ளார்.