அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம், 'தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போன்று அரசு ஒரு கமிட்டி அமைத்து பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது' குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் “ஹேமா கமிட்டி விவகாரம் போல் தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். அப்படி நடந்தால் பூதாகரமாக வெடித்திருக்கும். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படங்களில் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்னையை எதிர்கொண்டதில்லை” என்றார்.