ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய புரொமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஊர் முழுக்க பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் விஜய் சேதுபதியிடம் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவருக்கு அட்வைஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, வீக் எண்டு என்றால் நல்லவர்கள் மாதிரி பம்மிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் வார நாட்களில் எதிர்பார்ப்பார்கள். ரொம்ப உசாரா இருங்க சார் என்று விஜய் சேதுபதியை உஷார் படுத்துவது போன்ற வசனங்கள் உள்ளது. இறுதியாக விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று சொல்லியபடி ஒரு பளீர் சிரிப்புடன் இந்த வீடியோ முடிவடைகிறது. விரைவில் பிக்பாஸ் 8 சீசன் ஒளிபரப்பாக உள்ளது.