சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
சினிமா நடிகைகள் என்றாலே 'காதல் கிசுகிசு' இல்லாமல் இருக்காது. கிசுகிசுக்களால் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள், பிரிந்தவர்களம் இருக்கிறார்கள். சில காதல்கள் கிசுகிசுக்களுடனேயே முடிந்தும் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தாலும், ஒரு பாடலுக்கு நடனமாடியதிலும் வசீகரித்தவர் தமன்னா. தற்போது பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவைக் காதலித்து வருகிறார். 30 வயதைக் கடந்துள்ள தமன்னாவுக்கும், விஜய் வர்மாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது இரண்டு காதல் 'பிரேக் அப்' ஆன தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு காதல் அவருடைய சிறிய வயதில் வந்து பிரேக் அப் ஆனதாம். அடுத்த காதல் வளர்ந்த பின்பு வந்து முறிந்து போனதாம். தனது வாழ்க்கையில் அவரால் நேர்மறையான எண்ணங்களை வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதால் விலகிவிட்டாராம்.
தமிழில் தற்போது முன்னணி நடிகராக உள்ள ஒரு வாரிசு நடிகருக்கும், தமன்னாவுக்கும் காதல் என சில வருடங்களுக்கு முன்பு பெரிதும் கிசுகிசுக்கப்பட்டது. அந்த கிசுகிசு வெளியானதும் அவருக்கு உடனடியாக உறவுக்காரப் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.