ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, யோகி பாபு, மடோனா செபஸ்டியன், அபிராமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. அஸ்வின் விநாயகமூர்த்தி என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபு தேவா பிணமாக நடித்திருக்கிறார். அந்த பிணம் நான்கு பெண்களிடம் சிக்கியுள்ள நிலையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாகும். முழு நீள காமெடி கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா எப்படி இறந்தார். எதற்காக இறந்தார் என்பது சஸ்பென்சாக செல்கிறது. பிணமாக நடித்திருந்தாலும் பிரபுதேவா அதிரடி நடனமாடும் பாடல் காட்சிகளும் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு ஒரு சர்ச் பாதிரியார் வேடத்தில் நடித்துள்ளார். மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக நடித்து இருப்பார். கிட்டத்தட்ட அதே மாதிரியான வேடத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.