அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சர்தார் 2ம் பாகத்திலும் கார்த்தியின் அப்பா தோற்றத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் இடம் பெறுகிறது. இந்த பிளாஷ்பேக் காட்சிகளின் காலகட்டம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிரதமராக இருந்த காலகட்டத்தில் நடைபெறுகிறதாம். இதற்காக அவர் போன்ற தோற்றம் போல் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண் ஒருவரை நடிக்க வைத்து வருகின்றனர் என படக்குழு வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.