இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இங்குள்ள முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவாவதிக்கவும், முடிவெடுக்கவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 8ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய கமிட்டி அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நடிகர் நடிகைகளின் நட்சத்திர கலை விழா நடத்துவது குறித்தும், நவம்பர் 1ந் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பது குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.