பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாள திரை உலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும் பெண்கள் பாலியல் ரீதியாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் அது குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அதில் ஈடுபட்ட சில நடிகர்கள், இயக்குனர்கள் குறித்தும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் சித்திக், முகேஷ் ஜெயசூர்யா ஆகியவர் தான் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மீடியாக்களில் பெரிய அளவில் அடிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து மலையாள திரையுலகின் சீனியர் நடிகையான ஷீலா கூறும்போது, “பெண்கள் படங்களில் நடிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். நான் அதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்றாலும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் அவையெல்லாம் குறித்து பேசுவதற்கான வாய்ப்போ, அதற்கான சரியான சூழலோ யாருக்கும் அமையவில்லை. அதேசமயம் ஏன் சில நடிகர்களின் பெயர்கள் மட்டும் இந்த பிரச்சனையில் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது என்பதை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.




