வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ஒரு காலத்தில் நடிகர்கள் வடிவேலு - சிங்கமுத்து ஆகியோரின் காமெடி படங்களில் பட்டயகிளப்பியது. இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பிரச்னைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கி தந்ததாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சிங்கமுத்துவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் சமீபத்தில் வடிவேலு தொடர்ந்தார். அதில் கடந்த பிப்ரவரியில் ஒரு யு-டியூப் சேனலில் சிங்கமுத்து தன்னை அவதூறாக தரக்குறைவாக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். எனவே சிங்கமுத்து எனக்கு ரூ. 5 கோடியை நஷ்டஈடாக வழங்க வேண்டும், என்னைப்பற்றி அவர் பேச தடை விதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இருவாரங்களுக்குள் சிங்கமுத்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் அவகாசம் அளித்து இருந்தது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் இரண்டு வாரகால அவகாசம் அவருக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.