'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
'ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்' என்ற தலைப்பில், உலகம் முழுக்க இசை கச்சேரி நடத்தி வருகிறார் ஸ்ரேயா. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் 6 இடங்களில் இசை கச்சேரி நடத்திய பாடகி ஸ்ரேயா கோஷல், கடைசியாக டில்லியில் கடந்த மாதம் 10ம் தேதி நடத்தினார். இதையடுத்து கோல்கட்டாவில் வரும் 14ம் தேதியும், துபாயில் வரும் 21ம் தேதியும் இசைக்கச்சேரி நடத்துவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் இசைக்கச்சேரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் : இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 'சமீபத்தில் கோல்கட்டாவில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும்போது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கோல்கட்டாவில் நடக்கவிருந்த கச்சேரியை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நம் நாட்டில் மட்டுமின்றி, இந்த உலகிலுள்ள அனைத்துப் பெண்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன். எனது இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.