ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி. இந்தியாவில் உயர்ந்து விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். 'மீரா' என்ற படத்தில் மீராவாக நடித்தவர். இவரது வாழ்க்கை கதை சினிமாவாக தயாராகிறது. இதில் எம்எஸ் சுப்புலட்சுமியாக வித்யா பாலன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அவரது வாழ்க்கை மேடை நாடகமாக உருவாகிறது.
எழுத்தாளர் வி.எஸ்.வி.ரமணன் எழுதிய 'காற்றினிலே வரும் கீதம்' புத்தகத்தை தழுவி அதே பெயரில் இந்த நாடகம் உருவாகியுள்ளது. இதை பம்பாய் ஞானம் இயக்குகிறார். தக்ஷின் இசையமைக்கிறார். த்ரீ நிறுவனம் மற்றும் கஸ்தூபா மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நாடகம் வரும் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வாணி மகால் மற்றும் நாரத கான சபையில் நடைபெற உள்ளது. சுப்புலட்சுமியாக நாடக நடிகை லாவண்யா நடிக்கிறார்.