டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய். தமிழகம், கேரளம் என இரண்டு மாநிலங்களிலும் அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம் உண்டு. தெலுங்கிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி சமீப காலங்களில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
தமிழகத்தில் எந்த ஒரு பொது இடத்திற்கும் விஜய்யால் போக முடியாத ஒரு சூழல் உள்ளது. அப்படி அவர் சென்றால் எண்ணற்ற ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்வதால் அவர் அதிகம் வெளியில் வருவதில்லை. இந்நிலையில் ஐதராபாத்தில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து அவர் 'சலார்' படம் பார்த்த தகவல் வெளியாகி உள்ளது.
'தி கோட்' படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருந்த போது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 'சலார்' படம் வெளியானது. அந்தப் படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு 'மாஸ்' தியேட்டரில் சாதாரண டிக்கெட்டில் விஜய் படம் பார்த்தார் என்ற தகவலை நடிகர் வைபவ் வெளியிட்டுள்ளார். அப்படி படம் பார்த்தால்தான் 'வைப்' ஆக இருக்கும் என விஜய் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இது பற்றி விஜய் படம் பார்த்த சிறு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர் ஒருவர், “எர்ரகட்டா, கோகுல் 70எம்எம் தியேட்டரில் விஜய் சார் 'சலார்' படத்தைப் பார்த்தார் என்று சுற்றி வரும் செய்தி உண்மையானதுதான். அவரது தனிப்பட்ட உரிமைக்காக நாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டோம். அதை மதித்து நாங்களும் அமைதியாக இருந்தோம். அவர் படம் முடிந்து சென்ற போது எங்களைப் பார்த்து கையசைத்தார். அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது,” என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.




