ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சென்னை: ''கேரளாவில் படப்பிடிப்பின்போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர்'' என நடிகை ராதிகா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.
கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை நடிகைகள் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் சுமத்தி வருகின்றனர். மலையாள திரையுலகையே விழி பிதுங்க வைத்துள்ள இந்த விவகாரம் அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மோகன்லால், உள்ளிட்ட பிரபல நடிகர்கள் திரைப்பட சங்க பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது.
ராதிகா
இந்நிலையில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அளித்த பேட்டியில், ''கேரளாவில் படப்பிடிப்பின்போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் அறை எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு வருவேன். அதன் பின்னர், நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன். படப்பிடிப்பின் போது நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு'' எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
ராதிகாவின் இந்த பகீர் குற்றச்சாட்டுகளால் கேரள திரையுலகம் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அதில், தான் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ராதிகா விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.