அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்குத் தனியாக இசை வெளியீட்டு விழா எதையும் நடத்தவில்லை. அரசியல் கட்சி ஆரம்பித்ததால் அதை விஜய் தவிர்த்தாரா அல்லது வேறு ஏதும் அரசியல் காரணங்களா என்பது தெரியவில்லை. நேரடியாக தனது கட்சி மாநாட்டில் பேசுவோம் என்று விட்டுவிட்டாரா என்று கூட யோசிக்கலாம்.
இப்படத்திற்காக இதுவரையில் நான்கு சிங்கிள்கள் வெளியாகி உள்ளது. “விசில் போடு, சின்னச் சின்ன கண்கள், ஸ்பார்க், மட்ட” ஆகிய நான்கு சிங்கிள் பாடல்களை வெளியிட்டார்கள். இவை தவிர படத்தில் ஐந்தாவதாக இளையராஜாவின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து படத்தில் வைத்துள்ளோம் என படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அது படத்தில் சரியானதொரு இடத்தில் இடம் பெறுகிறது என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பு தனது அப்பா இளையராஜாவின் சில சூப்பர் ஹிட் பாடல்களை தனது படங்களில் ரீமிக்ஸ் செய்துள்ளார் யுவன். 'குறும்பு' படத்தில் 'ஆசை நூறு வகை' பாடல், 'வல்லவன்' படத்தில் 'காதல் வந்துருச்சி' பாடல், 'சிலம்பாட்டம்' படத்தில் 'வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள' பாடல், 'டிக்கிலோனா' படத்தில் 'பேரு வச்சாலும் வைக்காம' பாடல், 'காபி வித் காதல்' படத்தில் 'ரம் பம் பம், ஆரம்பம்' பாடல் ஆகியவற்றை யுவன் ரீமிக்ஸ் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் இந்த ரீமிக்ஸ் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததே யுவன்தான். 2003ல் வெளிவந்த 'குறும்பு' படத்தில்தான் அதை ஆரம்பித்து வைத்தார் யுவன். அஜித் நடித்த 'பில்லா, ஆரம்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அப்படத்தில்தான் இயக்குனராக அறிமுகமானார்.
தற்போது 'தி கோட்' படத்தில் யுவன் ரீமிக்ஸ் செய்துள்ள பாடல் என்னவாக இருக்கும் என்பதை பட வெளியீட்டிற்கு முன்பு சொல்வார்களா ?.