ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடித்த ஜோடி சிவாஜி, பத்மினி. இந்த 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியை சேர்த்து வைத்தது பணம். அதாவது பணம் என்கிற படம். இதனை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார், கருணாநிதி வசனம் எழுதினார். பராசக்தி படம் தயாராகி கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பணமும் தயாரானது. சிவாஜி நடிப்பில் வெளிவந்த இரண்டாவது படம்.
இந்த படத்தை மதராஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் ஏ.எல்.சீனிவாசன். சிவாஜி, பத்மினியுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, சி.எஸ்.பாண்டியன், பி.ஆர்.பந்துலு, டி.ஏ.மதுரம், தங்கவேலு உட்பட பலர் நடித்தனர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். இருவரும் முதன்முதலில் சேர்ந்து இசை அமைத்த திரைப்படமும் இதுதான்.
'எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்' என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம். கண்ணதாசனன் எழுதிய பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடினார்.