ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த நடித்த 'பேட்ட' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ‛வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கிப் பாயும் தோட்டா, வடக்குப்பட்டி ராமசாமி' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், சாய் விஷ்ணு என்பவரை மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக காதலித்து வந்துள்ளார். அதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்தவந்த அவர், முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்னுடைய விருப்பம் உண்மையாகிவிட்டது. இனி என்றென்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷ்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.