தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகந்நாத். தமிழில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போக்கிரி' படங்களின் தெலுங்கு ஒரிஜனலை இயக்கியவர். தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவரது இயக்கத்தில் 2022ல் விஜய் தேவரகொன்டா நடித்து வெளிவந்த 'லைகர்' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பின் அவரால் திருப்புமுனையைப் பெற்ற ஹீரோக்கள் கூட அவரது இயக்கத்தில் நடிக்கத் தயங்கினர்.
இந்நிலையில் பூரி இயக்கிய 2019ல் வெளிவந்து வெற்றிபெற்ற 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் நாயகன் ராம் பொத்தினேனி நடிக்க சம்மதித்தார். அப்படத்தின் இரண்டாம் பாகமாக 'டபுள் ஐஸ்மார்ட்' என்ற படத்தை உருவாக்கி கடந்த வாரம் வெளியிட்டனர். ஆனால், இந்தப் படமும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
படம் சிறப்பாக ஓடும் என்று எதிர்பார்த்த 'ஹனுமான்' படத்தின் தயாரிப்பாளரான நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தெலுங்கில் வெளியிட 60 கோடி கொடுத்து வாங்கினாராம். அவருக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். 'ஹனுமான்' படத்தின் மூலம் சுமார் 350 கோடி வசூலை அள்ளியவர்களுக்கு இந்த 'டபுள் ஐஸ்மார்ட்' படம் சுமார் 40 கோடி நஷ்டத்தைக் கொடுத்துவிட்டதாம். அதனால், பூரி ஜெகந்நாத் அந்நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கித் தந்து அந்த நஷ்டத்தைச் சரி செய்வதாகச் சொல்லி இருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.