லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் 'இந்தியன் 2'. இப்படம் ஆரம்பமான நாளிலிருந்து , படப்பிடிப்பு நடந்த போது ஏற்பட்ட விபத்தால் மரணம், தயாரிப்பாளர் இயக்குனர் இடையேயான மோதல், வழக்கு, பஞ்சாயத்து, தியேட்டர்களில் வெளியாகி தோல்வி, ஓடிடியில் வெளியான பின்பும் அதிக கமெண்ட்கள் என பல்வேறு சிக்கல்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
படத்தின் மொத்த பட்ஜெட் என்ன, படத்தின் வசூல் என்ன என்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரையிலும் வெளியாகவில்லை. எங்கோ ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு விஷயம் 'இந்தியன் 2' படத்தைப் பற்றி இப்போதும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளருமான காட்ரகட்ட பிரசாத், இரண்டு வாரங்களுக்கு முன்பு அளித்த ஒரு வீடியோ பேட்டியை இப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த பேட்டியில் 'இந்தியன் 2' படத்தின் பட்ஜெட் குறித்து அவருக்குத் தெரிந்த சில தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
“தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நான் தலைவராக இருந்த போது லைகா புரொடக்ஷன்ஸ், டைரக்டர் ஷங்கர் மேல புகார் கொடுத்தாங்க. அக்ரிமென்ட்ல போட்ட பட்ஜெட்டை விட அதிகமா போயிடுச்சி, படம் 70 சதவீதம் கூட முடியல, இப்ப கார்ப்பரேட் பர்மிஷன் கொடுத்தால்தான் அடுத்து ஷூட்டிங் பிளான் பண்ண முடியும்னு கொடுத்தாங்க. லண்டன்ல இருந்து தயாரிப்பாளர் சுபாஷ்கரன் எனக்கு போன் பண்ணி என்ன பண்ணலாம்னு கேட்டாரு. நீங்க புகார் கொடுத்தால் எடுத்துக்கறோம்னு சொன்னேன். புகார் கொடுத்தாரு, அப்புறம் பேசினோம். ஆனால், அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் காம்ப்ரமைஸ் ஆகிட்டாங்க.
அந்தப் படத்துக்கு 236 கோடி ரூபாய் அக்ரிமென்ட். ஆனால், படத்தை முடிக்க இன்னும் 150 கோடி கொடுத்தாங்க. அதையும் மீறி 600 கோடி ரூபாய் பட்ஜெட் ஆனதா சொல்றாங்க. அது எந்த அளவுக்கு நிஜம்கறது கொடுத்தவங்களுக்கும், வாங்கனவங்களுக்கும் தான் தெரியும். அந்தப் படத்தை முடிக்க ஆறு வருஷமாச்சி. கொரோனா டைம்ல ஒரு இரண்டு வருஷம் போயிடுச்சி, அப்பதான் இந்தப் புகார் வந்தது. அப்போ லைகா புரொடக்ஷனுக்கு ஒரே ஒரு ஆலோசனை சொன்னேன். இப்போ வரைக்கும் 236 கோடி செலவு பண்ணியிருக்கீங்க. இது போயிடுச்சின்னு நினைச்சிக்குங்க, இதுக்கப்புறம் நீங்க செலவு பண்ற ஒவ்வொரு ரூபாயும் நஷ்டம், ஜாக்கிரதைன்னு சொன்னேன். ஆனாலும், அவங்க எங்க கம்பெனிக்கு இமேஜ், பிரஸ்டீஜ், கமல்ஹாசன் சினிமான்னு படத்தை தொடர்ந்து செஞ்சாங்க. சரி, உங்க இஷ்டம்னு சொன்னேன். கார்ப்பரேட் பர்மிஷன் வாங்கினாங்க. படத்தை முடிச்சாங்க. அடுத்து 'இந்தியன் 3' வரப் போகுது,” என்று அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
'இந்தியன் 2' பட்ஜெட், தியேட்டர் வசூல், சாட்டிலைட் விற்பனை, ஓடிடி விற்பனை ஆகியவற்றைப் பற்றிய மொத்த விவரங்கள் படத்தைத் தயாரித்தவர்களுக்கும், இயக்குனருக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று. இனியும், அது பற்றிய விவரங்கள் வெளிப்படையாக வர வாய்ப்பில்லை. 'இந்தியன் 3' எப்போது வரும், எப்படி வரும் என்பது மட்டுமே ரசிகர்களின் அடுத்த கேள்வியாக இருக்கலாம்.