அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
இன்றைக்கு சின்னத்திரையில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வருகிறவர் சோனியா. நடிப்போடு நடிகர் சங்க செயல்பாடுகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சோனியா தேசிய விருது பெற்ற நடிகை என்பது பலரும் அறிந்திராத, அல்லது மறந்துபோன ஒன்று. 1984ம் ஆண்டு வெளியான 3டி படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தில் ஏழை சிறுமியாக, நடித்த சோனியா அந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். அதேபோல 1987ம் ஆண்டு 'நொம்பரத்தி பூவு' என்ற படத்திற்காக மாநில அரசின் விருதை பெற்றார்.
1984ம் ஆண்டு 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளத்தில் 100கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சோனியா சில படங்களில் நாயகியாகவும், பல படங்களில் குணச்சித்ர நடிகையாகவும் நடித்தார். பின்னர் சின்னத்திரைக்கு வந்தார்.