வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
'விடியும் வரை பேசு' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் டெல்னா டேவிஸ். அதன்பிறகு பத்ரா, 49 ஓ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், சில மலையாள படங்களிலும் நடித்தார். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'குரங்கு பொம்மை' படத்தில் நடித்தார். சின்னத்திரையில் பிசியான நடிகையாக இருக்கும் டெல்னா, ‛அன்பே வா, அபியும் நானும், கண்ணான கண்ணே, தாமரை' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார்.
தற்போது அவர் 'லவ் இங்க்' என்ற படத்தில் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார். ராஜ் அய்யப்பா ஹீரோ. இவர் தவிர யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனீஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கேபிஒய் வினோத், க்மார்க் ஆண்டனிக் டிஎஸ்ஜி, மவுரிஷ் தாஸ், பிரீதா, வினோத் முன்னா நடிக்கின்றனர். ஏ.எஸ்.அர்ஜூனா ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மேகராஜ் தாஸ் கூறியதாவது: தங்களுக்கு விருப்பமான நபரின் பெயரையோ அல்லது காதல் சின்னத்தையோ டாட்டூவாக வரைவதுதான் 'லவ் இங்க்'. இதன் இன்னொரு பக்கம் குறித்து சொல்லும் கதையுடன் உருவாகும் படம். அஜித் குமாரின் 'வலிமை', அதர்வா முரளியின் '100' உள்பட சில படங்களிலும், வெப்தொடர்களிலும் நடித்துள்ள ராஜ் அய்யப்பா ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக 'குரங்கு பொம்மை' டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.
பக்கத்துவீட்டு பையன் மாதிரி ஒருவரை தேடினேன், ராஜ் அய்யப்பாவை பார்த்ததும், பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன். மேலும், 'அன்பே வா' டிவி சீரியலில் டெல்னாவின் நடிப்பைப் பார்த்து டெல்னாவை கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தேன். ஹன்சிகாவைப் போன்ற மிகச்சிறந்த அழகான பெண் நாயகியை தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாகப் பார்க்க முடியவில்லை. என் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு பெண் நாயகி தேவைப்பட்டார், அதற்கு டெல்னா பொருந்தினார். அதனால் அவரை தேர்வு செய்தேன். என்றார்.