டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' |
சோனியா அகர்வால் தற்போது சிறு பட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகி ஆகிவிட்டார். பேய் கதைகளில் நடிக்க அதிக வாய்ப்பு வருகிறது. இதற்கிடையில் இசை ஆல்பம் ஒன்றிலும் பேயாக நடித்திருக்கிறார்.
'பாரிஜாதம்' படத்தின் மூலம் இசை அமைப்பாளரான தரண் குமார் அதன்பிறகு லாடம், சித்து பிளஸ் 2, சமர், விரட்டு, தகராறு, நாய்கள் ஜாக்கிரதை, பிஸ்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவ்வப்போது ஆல்பங்களும் வெளியிட்டு வரும் இவர் தற்போது 'பேய் காதல்' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் அவர் சோனியாவுடன் நடித்திருக்கிறார். அழகான பேயாக இருக்கும் சோனியா அகர்வாலை அவர் காதலிப்பதுதான் பாடலின் கான்செப்ட். இதில் உலக புகழ்பெற்ற கான்ஜுரிங், நன், அனபெல்லா பேய்களுடன் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
இதன் அறிமுக விழாவில் பேசிய சோனியா அகர்வால் “எனக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. மலையாளத்தில் 'பிஹைண்ட்' படத்தில் நடித்துள்ளேன். தமிழில் இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். தெலுங்கிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. நான் நடித்த '7ஜி ரெயின்போ காலனி' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்” என்றார்.