வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பல ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் மறு வெளியீடு செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் சமீபத்திய படங்கள்கூட ரீ ரிலீசுக்கு வருவது டிரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி சிறந்த ஒரிஜினில் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மறுமுறை வெளியிடப்பட உள்ளது. ராஜமவுலியின் பாகுபலி அளவிற்கு வரவேற்பை பெறாத இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்ற பிறகு மக்களிடம் பார்க்கும் ஆர்வம் வந்திருப்பதால் இதனை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலின் தொழில்நுட்ப தரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.