ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தேசிய விருது பெற்ற குணசித்ர நடிகர் அப்புகுட்டி. சமீப காலமாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள 'வாழ்க விவசாயி' படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதுதவிர அவர் நடித்து வரும் படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்'. இந்த படத்தை ராஜு சந்திரா எழுதி இயக்குகிறார். பிளான் திரீ ஸ்டுடியோஸ் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்ரா இருவரும் தயாரிக்கிறார்கள். நவ்நீத் இசை அமைக்கிறார். இயக்குனரே ஒளிப்பதிவும் செய்கிறார்.
கிராமத்து யதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. நேற்று அப்புகுட்டிக்கு பிறந்தநாள். இதை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டு பாராட்டினார். இந்த போஸ்டரில் அப்புக்குட்டி பாடையில் பிணமாக சிரித்தபடி செல்லும் படம் இடம் பெற்றுள்ளது. பிறந்தநாளில் இப்படி ஒரு படத்தை வெளியிட துணிச்சல் வேண்டும் என்று கூறி விஜய்சேதுபதி அப்புகுட்டியை பாராட்டி உள்ளார்.